க்ரைம்

பட்டாசு கடையில் பதுக்கிய 204 கிலோ கஞ்சா பறிமுதல்: விருதுநகர் அருகே 2 பேர் கைது

செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே பட்டாசு கடையில் பதுக்கி வைத்திருந்த 204 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் அருகே கவலூரில் உள்ள ஒரு பட்டாசு கடையில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து ஆமத்தூர் சார்பு ஆய்வாளர் கவுதம்விஜய் மற்றும் தனிப்படை போலீஸார் நேற்று அதிகாலை குறிப்பிட்ட பட்டாசுக் கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது 94 பாக்கெட்டுகளில் 204 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அதை கார் மூலம் கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

இது குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்த முயன்ற மதுரை மீனாட்சிபுரம் பூமி உருண்டை தெருவைச் சேர்ந்த சிவசாமி(31), சதீஸ்பாண்டி(21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் மனோ கர் நேரில் விசாரணை நடத்தினார்.

பட்டாசு கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.23.50 லட்சம் மதிப்பிலான 204 கிலோ கஞ்சா பொட்டலங்களையும், அவற்றை கடத்திச் செல்லப் பயன்படுத்திய கார் ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT