க்ரைம்

வேலூர்: மாணவியை கொன்று இளைஞர் தற்கொலை

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவியை, கருகம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (22) என்ற இளைஞர் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இருவரும் உயிரிழந்த நிலையில் இருப்பதை நேற்று மாலை மாணவியின் பெற்றோர் பார்த்துள்ளனர்.

தகவலின்பேரில் சத்துவாச்சாரி காவல் துறையினர் விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு விசாரணை செய்தனர். அதில், பள்ளிக்கு புறப்படும் நேரத்தில் வீட்டுக்குச் சென்றுள்ள இளைஞர், தனது காதலை ஏற்காத மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரியவந்தது.இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT