க்ரைம்

காஞ்சிபுரம் கோனேரிகுப்பம் ஊராட்சி தலைவரின் கணவர் கொலை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திமுக ஊராட்சித் தலைவரின் கணவர் கொலை செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் அருகே கோனேரிகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சைலஜா. அவரது கணவர் சேகர் திமுகவில் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகின்றார். இவர் நேற்று காலை தனது ஊரிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த சேகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்த கோனேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சேகரை மேல் சிகிச்சைக்காகச் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அவர் சென்னை செல்லும் வழியில் இறந்ததையடுத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் எடுத்து வரப்பட்டு உடற்கூறு ஆய்வு நடைபெற்றது.

இது தொடர்பாகக் காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT