தூத்துக்குடி: தூத்துக்குடி தாய்நகர் சுனாமி காலனியைச் சேர்ந்தவர் ஜெ.மரியான்(41). இவரை கஞ்சா விற்பனை தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி அய்யப்பன் நகர்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அ.பாரதநாதன் என்ற குட்டி (35) என்பவரை சிப்காட் போலீஸார் கைது செய்தனர். எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.