க்ரைம்

திருச்சி: வலிமை திரைப்பட கொண்டாட்டத்தின்போது காவலரைத் தாக்கிய அஜித் ரசிகர்கள் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் லால்குடியி லுள்ள அன்பு திரையரங்கில் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் முதல்நாளே படம் பார்க்கச் சென்றிருந்த அஜித் ரசிகர்களான டால்மியாபுரம் அம்பாள் டாக்கிஸ் பகுதியைச் சேர்ந்த முத்தழகு மகன் அருண் குமார்(25), ரவிக்குமார் மகன் கோபிநாத்(24) ஆகியோர் திரை யரங்கில் வைக்கப்பட்டிருந்த தீத்தடுப்பு சாதனங்களை தூக்கி எறிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணிக்குச் சென்றிருந்த காவலர் சுரேஷ் என்பவர் அவர்களைத் தடுக்க முயன்றபோது இருதரப் புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அருண்குமார், காவலர் சுரேஷை தாக்கி, இடதுகாலில் கடித்து காயப்படுத்தினார். இதையடுத்து காவலர் சுரேஷ் லால்குடி அரசு மருத்து வமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மிரட்டல் விடுத்தது, தாக்கி கொலை செய்ய முயற்சி செய்தது, அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள் ளிட்ட பிரிவுகளின்கீழ் லால்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அருண்குமார், கோபிநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT