திருச்சி கே.கே.நகர் அருகே யுள்ள ஓலையூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த இன்னாசி மகன் ஆரோக்கிய சவரிதாஸ் (39). இவர் நேற்று முன்தினம் அங்குள்ள சமுதாயக் கூடத் தின் பின்பகுதியில் நின்று கொண்டிருந்த மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச் சிறுமி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதைக்கண்ட ஆரோக்கிய சவரிதாஸ் அங்கிருந்து தப்பி யோடிவிட்டார். இதுதொடர்பாக அச்சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக் குப் பதிவு செய்து ஆரோக்கிய சவரிதாஸை கைது செய்தனர்.