ஆண்டிபட்டி அருகே கார்-கேரள சுற்றுலா வேன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
மதுரை நாகமலை புதுக் கோட்டையைச் சேர்ந்தவர் முருகபிரபு(44). இவர் தனது நண்பர்களுடன் கம்பத்தில் இருந்து செக்கானூரணிக்கு காரை ஓட்டிச் சென்றார். ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த கார் மீது உரசி கட்டுப்பாட்டை இழந்தது. அதைத் தொடர்ந்து கேரள சுற்றுலா வேன் மீது மோதியது.
இதில் கார் பலத்த சேதமடைந் தது. காரை ஓட்டி வந்த முருகபிரபு இறந்தார். காரில் பயணம் செய்த செக்கானூரணியைச் சேர்ந்த சிவபாண்டி(48), செல்வம்(55) ஆகியோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயி ரிழந்தனர்.
இதே ஊரைச் சேர்ந்த பாண்டிய ராஜன்(44) பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் சுற்றுலா வேனில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் தேனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை-தேனி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆண்டிபட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.