காரைக்குடி சுப்பிரமணிய புரம் 9-வது வீதியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு சொந்த மான பழைய வீடு இருந்தது. சமீபத்தில் இந்த வீட்டை இடித்து விட்டு, இரும்பு கதவுகளை அருகேயுள்ள காலி இடத்தில் வைத்திருந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கதவுகள் காணாமல் போனது. காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் காரைக்குடி கற்பக விநாயக நகரைச் சேர்ந்த சோமு, வைரவபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா ஆகியோர் இரும்பு கதவுகளை திருடியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார், இரும்பு கதவுகளை பறிமுதல் செய்தனர்.