நீதிமன்றத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து படுகாய மடைந்த பட்டுசாமி. 
க்ரைம்

தி.மலை நீதிமன்ற முதல் தளத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலைக்கு முயற்சி?- அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை ஒருங் கிணைந்த நீதிமன்றத்தில், ஜாமீன் கிடைக்காததால் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீழ் செட்டிப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் எல்லப்பன்(53), ராஜா (35), பட்டுசாமி(24) மற்றும் பாலச்சந்தர்(22). இவர்கள் 4 பேர் மீதும், அதே கிராமத்தில் வசிக்கும் ஜீவா மனைவி பரிமளா என்பவர், தகராறு தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் கொடுத்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மீதான விசா ரணை, திருவண்ணாமலை எஸ்.சி.,-எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது, எல்லப்பன் உள்ளிட்ட 4 பேரும் ஆஜராகினர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க புகார்தாரர் தரப்பு மற்றும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், ஜாமீன் வழங்க மறுத்து 4 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது, ஜாமீன் கிடைக்காத விரக்தியால், தங்களது தரப்பு கருத்துக்களை ஏற்க மறுப்பதாக கூறிக்கொண்டு, நீதிமன்றத்தின் முதல் தளத்தில் இருந்து பட்டுசாமி என்பவர் கீழே குதித்துள்ளார். இதனால், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர், திரு வண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், எல்லப்பன், ராஜா, பாலச் சந்தர் ஆகிய 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT