தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்த 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அண்மையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாட்டியின் கிராம திருவிழாவுக்காக மாணவி சென்றுள்ளார். அப்போது, சிறுமியின் பெற்றோர், பாட்டி உள்ளிட்டோர் இணைந்து அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முனிரத்தினம் (30) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து, மாணவி பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் மாணவியின் பெற்றோர் மற்றும் திருமணம் செய்த லாரி ஓட்டுநர் முனிரத்தினம் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.