ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசு பேருந்து மோதி தனியார் வங்கி பெண் மேலாளர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை விவேகானந்தபுரத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மகள் ரஞ்சனி(23). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். புதிய பேருந்து நிலையம் அருகே தேவிபட்டினம் சாலையில் சென்றபோது மீமிசலில் இருந்து ராமநாதபுரம் வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே ரஞ்சனி உயிரிழந்தார். அதனையடுத்து பஜார் போலீஸார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.