மாமல்லபுரம்: மாமல்லபுரம் மீனவர் பகுதியில் வசிக்கும் தனபால் என்பவரின் மகன் மணிமாறன் (எ)அசோக்(26). மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவர், மாமல்லபுரம் கடற்கரையில் கடந்த 10-ம்தேதி நள்ளிரவு மது அருந்திக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த நபர்களிடம் மது வழங்குமாறு கூறி தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் மீனவ இளைஞரை அந்த கும்பல் கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது.
இது தொடர்பாக, மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து கடற்கரை அருகே உள்ளஉணவகம், விடுதிகளில் உள்ளசிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து, விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை பெருங்குடி அடுத்த மூப்பனார் நகர் பகுதியைச் சேர்ந்த அருள் என்பவரின் மகன் விக்னேஷ் (எ) விவேக்(22) என்ற இளைஞரைக் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், தலைமறைவான நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.