க்ரைம்

திருவள்ளூரில் கஞ்சா எண்ணெய் விற்றவர் கைது

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் எஸ்பி வருண்குமாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருவள்ளூர் தாலுக்கா போலீஸார் நேற்று முன்தினம் திருவள்ளூர் அடுத்த புட்லூர் விவேகானந்தா பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தோள் பையுடன் சுற்றித் திரிந்த, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா(22) என்ற இளைஞரை சோதனை செய்தனர்.

அச்சோதனையில், சுமார் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான, பாட்டில்கள் மற்றும் பாலிதீன் கவரில் அடைக்கப்பட்ட ஒன்றரை லிட்டர் அளவிலான கஞ்சா எண்ணெய் இருந்தது தெரியவந்தது.

போதையை ஏற்படுத்தும் இந்த கஞ்சா எண்ணெய்யை ஆதித்யா, 15 நாட்களுக்கு ஒருமுறை ஆந்திராவிலிருந்து எடுத்து வந்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் தாலுக்கா போலீஸார், ஆதித்யாவை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சா எண்ணெய் மற்றும் அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களைக் கைப்பற்றினர்.

SCROLL FOR NEXT