திருமுருகன் 
க்ரைம்

போடியில் பெண் வனக் காவலர் கொலை: மதுரை ஆயுதப்படை காவலர் கைது

செய்திப்பிரிவு

போடியில் பெண் வனக் காவலர் கொலை செய்யப்பட்டார். இது தொடர் பாக மதுரை ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார்.

மதுரை சதாசிவ நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பொன்பாண்டி. இவரது மனைவி சரண்யா(27). தேனியில் வனக்காவலராகப் பணிபுரிந்தார். பொன்பாண்டி 4 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்தார். சரண்யா 2 குழந்தைகளுடன் போடியில் தனியே வசித்து வந்தார்.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் திருமுருகன்(28). இவர் சரண்யா வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு போடி சென்ற இவருக்கும், சரண்யாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவரது கழுத்தை நெரித்துக்கொலை செய்துவிட்டு, கீரைத்துறை காவல் நிலையத்தில் திருமுருகன் சரண டைந்தார். இவரை போடி நகர் காவல் ஆய்வாளர் சரவணன் கைது செய்தார். போலீஸார் கூறுகையில், மதுரையில் காவல்துறையில் சேர பயிற்சியில் சந்தித்ததில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்ததால் திருமுருகனின் மனைவி பிரிந்து சென்றார். நேற்று முன்தினம் இரவு திருமணம் தொடர் பாக பேசியதில் வாக்குவாதம் ஏற்பட்டு கொலை நடந்துள்ளது என்றனர்.

SCROLL FOR NEXT