க்ரைம்

தனியார் நிறுவன ஊழியரிடம் தம்பதி ரூ.8 லட்சம் மோசடி: மற்றொரு பண மோசடியில் இளைஞர் கைது

செய்திப்பிரிவு

புதுச்சேரி லாஸ்பேட்டை கல்லூரி சாலையில் வசிப்பவர் ராஜகுரு (45). இவரது மனைவி கல்விக்கரசி (42). இருவரும் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் 2015-ல் இருந்து மாதாந்திர மற்றும் தீபாவளி ஏலச்சீட்டு பிடித்ததாக கூறப்படுகிறது. இவர்களிடம் லாஸ் பேட்டை சாந்தி நகர் சிவாஜி தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுப்பையா (40) என்பவர் மாதாந்திர சீட்டுப்பணம் கட்டி வந்த நிலையில், ரூ.8 லட்சம் வரை சீட்டு பணத்தை எடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை சுப்பையாவிடம் கொடுக்காமல் ராஜகுருவும், கல்விக்கர சியும் காலம் கடத்தி வந்தனர்.

இந்நிலையில் தம்பதி வீட்டிலி ருந்து திடீரென மாயமாயினர். அதிர்ச்சியடைந்த சுப்பையா பல இடங்களில் தேடிப் பார்த்து ஏமாற்றமடைந்தார். அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது ஆபாச மாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுப்பையா, லாஸ் பேட்டை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து அவர் களை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

புதுச்சேரி அடுத்த அரியாங் குப்பம் ஆர்.கே. நகரைச் சேர்ந்தவர் அபிநயா (23). இவர் புதுச்சேரி நூறடி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை செய்த கரூர் மாவட்டம் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த அஜித் (எ) அஜித்குமார் (27) என்பவர் அபிநயா பெயரில் ஆன் லைன் வங்கியில் ரூ.71 ஆயிரம் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் ஒரு மாதம் கழித்து அந்தப் பணத்தை அபிநயாவிடம் இருந்து திரும்ப வாங்கிக் கொண்டார். இதையடுத்து அஜித் எந்த பதிலும் கூறாமல் தலைமறைவாகிவிட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட அபிநயா சம்பவம் குறித்து அரியாங்குப்பம் காவல் நிலை யத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக் குப்பதிவு செய்து அஜீத்குமாரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT