க்ரைம்

பெரம்பலூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் காரை ஊராட்சி மலையப்ப நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக (பொறுப்பு) பணியாற்றி வருபவர் சின்னதுரை(42). இப்பள்ளியில் மற்றொரு ஆசிரியரும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று சக ஆசிரியர் விடுப்பு எடுத்த நிலையில், சின்னதுரை மட்டும் பணியில் இருந்தார். அப்போது, அவர்மாணவிகளுக்கு நடனம் சொல்லித்தருவதாகக் கூறி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்தமாணவிகள் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை

உடனடியாக, பள்ளியைமுற்றுகையிட்ட பெற்றோர்கள் இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று, விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சின்னதுரையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT