க்ரைம்

ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி: நாமக்கல்லில் 3 திருநங்கைகள் கைது

செய்திப்பிரிவு

நாமக்கல்லில் ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ.50 ஆயிரம் வழிப்பறி செய்த 3 திருநங்கைகளை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகில் உள்ள ஏ.களத்தூரைச் சேர்ந்தவர் வசந்த் (22). சரக்கு ஆட்டோ ஓட்டுநர். நாமக்கல் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவுடன் நின்று கொண்டு இருந்தபோது, பொய்யேரிக்கரையைச் சேர்ந்த திருநங்கைகள் அர்ச்சனா (29), லோகேஸ்வரி (26), பவானி (25) ஆகியோர், அவரை மிரட்டி ரூ.50 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாமக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகள் மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT