க்ரைம்

புதுவையில் சாலையில் கட்டியிருந்த பேனரில் பைக் மோதி இளைஞர் மரணம்: பேனர் தடைச் சட்டம் இருந்தும் சோகம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த வார்க்கால்ஓடை கிராமத் தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). பட்டயப்படிப்பு முடித்துவிட்டு காட்டுக்குப்பம் பகுதியில் உள்ளதனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். நேற்று காலை தனதுநண்பர் ஸ்ரீபன் (18) என்பவருடன் மோட்டார் பைக்கில் கடலூர் நோக்கி சென்றார். கன்னியக்கோயில் அருகே வந்தபோது பேனர் கட்டப் பட்டிருந்த மரக்கம்பத்தில் பைக் மோதியதில் ஆகாஷ் தலையில் பலத்த காயமடைந்தார். அவரது நண்பர் ஸ்ரீபனுக்கு கால், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ஆகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த ஸ்ரீபனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் அமலில் உள்ளது.இதை அதிகாரிகள் கண்டு கொள் வதில்லை.

இதன் காரணமாகவே பேனர் கட்டப்பட்டிருந்த மரக்கம்பத்தில் மோதி உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT