கணேசன் 
க்ரைம்

தேனி அருகே மனைவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வைத்த முதியவர் கைது

செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், குமணன்தொழு அருகே தளிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(65). விவசாயி. இவரது மனைவி அம்சக்கொடி(57). இருவரும் தோட்டத்து வீட்டில் குடியிருந்தனர். கணேசனுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இந்நிலையில், கடந்த 31-ம் தேதி ஏற்பட்ட தகராறில் அம்சக்கொடியை கணேசன் கட்டையால் தாக்கி கொலை செய்தார். பின்னர், அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி வைத்து விட்டார்.

பின்னர் உறவினர்களிடம் தனது மனைவி காணாமல் போய்விட்டதாகக் கூறி வந்தார். நேற்று அவரது உடலை புதைக்க முயன்றார்.

அப்போது துர்நாற்றம் வீசியதால் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் அங்கு வந்தனர். அப்போது மனைவியை அவர் கொலை செய்த விவரம் தெரிய வந்தது. உடன் மயிலாடும்பாறை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். கணேசனை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT