புதுச்சேரி: பாகூர் அருகே சோரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி சின்ன ஆராய்ச்சி குப்பம் பகுதியில் உள்ள வயல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து பாகூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், “மூதாட்டி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மூதாட்டியிடம் செல்போன் கேட்டுள்ளார். அவர் கொடுத்த பின்னர் திடீரென அவரை தடியால் அடித்துள்ளார்.
இதில் மயங்கிய மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அவர் தற்போது அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டனர்.