திண்டுக்கல் மாவட்டம், வத்தல குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் சந்தனக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வத்தலகுண்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸார் அங்கு சென்று ஜெயராஜ் (52) என்பவர் வீட்டில் சோதனையிட்டனர்.
இதில் சந்தனக் கட்டை துண் டுகள் மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் ஜெயராஜை கைது செய்தனர். மேலும் சந்தனக் கட்டைகளை வத்தலகுண்டு வனத்துறையினரிடம் ஒப்ப டைத்தனர். அவை எங்கிருந்து பெறப்பட்டன என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.