திருச்சி விமானநிலையத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் துபாய் செல்வதற்காக நேற்று முன்தினம் திருச்சி விமானநிலையத்துக்கு வந்த பயணிகளின் உடமைகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த பைக்குள் ரூ.13.30 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.
சுங்க அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.