க்ரைம்

திருப்பத்தூர்: கடைகளில் திருட முயன்றவர் கைது

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நகர காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளங்கோவன்(31) என்பதும், இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT