ரவுடி பட்டியலில் உள்ளவர்க ளின் ஆலோசனையின் பேரில்எலவனாசூர்கோட்டை போலீஸார்
விசாரணை நடத்துவதாக புகார் தாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் சரகத்திற் குட்பட்ட எலவனாசூர்கோட்டை காவல் நிலையம் உதவி ஆய்வா ளர் தலைமையில் இயங்கி வருகி றது. இந்தக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் உட்பட 14 பேர் பணிபுரிகின்றனர். இதுதவிர சிறப்பு பிரிவு காவலர் ஒருவரும் உள்ளார்.
இக்காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் நிலவும் குற்றச்சம்பவங்கள், அடிதடி, நிலப்பிரச் சினை, பெண்களுக்கு எதிரான புகார்கள் என பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கும் நிலையில், அந்தபுகார்கள் மீது விசாரணை என்பது,காவல் நிலைய ரவுடிப் பட்டியலில்இடம்பெற்றுள்ள சிலரின் ஆலோசனையின் பேரில் தான் நடைபெறுகி றது. இதனால் பாதிக்கப்பட்டோர் புகாரளித்தாலும், அதன் மீது நடவடிக்கை என்பதை ரவுடி பட்டியலில் உள்ள நபர்கள் தான்தீர்மானிப்பதாக புகார் எழுந் துள்ளது.
இதே போல் எலவனாசூர்கோட் டையை அடுத்த எஸ்.மலையனூர் கிராமத்தில், ஏழுமலை என்பவருக் குச் சொந்தமான இடத்தை, எஸ்பியின் வாகன ஓட்டுநர் ஒருவர் ஆக்கிரமித்து வருவது தொடர்பாக எலவனாசூர்கோட்டைக் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட் டுள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவர் மீதே வழக்குப் பதிவு செய்வேன் என காவல் நிலைய எழுத்தர் மிரட்டு கிறாராம்.
அதேபோன்று மலையனூர் கிராமத்தில் ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்த மரங்களை சிலர் வெட்டியுள்ளானர். இது தொடர்பாக ராமர் என்பவர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித் துள்ளார்.
வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலரிடம் பேசியுள்ளார். இதற் கிடையே ராமர் என்பவரை மரம் வெட்டும் கும்பல் தாக்கியுள்ளது. இதுதொடர்பாக காவல் நிலை யத்தில் புகாரளித்தபோது, நடவடிக்கை எடுக்காமல் மரம் வெட்டும் கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக ராமர் கூறுகிறார்.
அப்பகுதியில் நிலவும் அடிதடி, இடப்பிரச்சினை, மண் கடத்தல், விபத்து வழக்கு எதுவென்றாலும் சிறப்பு பிரிவு காவலர் ஒருபுறமும், காவல் நிலைய எழுத்தரும்,ரவுடி பட்டியலில் உள்ள சிலரும் இணைந்து தான் புகார்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்பதை தீர்மானிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி அப்பகுதியில் சட்டம்ஒழுங்கை பாதுகாக்கவேண்டும் என் கின்றனர் எலவனாசூர்கோட்டை வாசிகள்.
இதுதொடர்பாக உளுந்தூர் பேட்டை டிஎஸ்பி பொறுப்பு வகிக் கும் உமாவிடம் கேட்டபோது, "புகார்கள் மீது முறையாக தான் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிலர் புகார் அளித்து விட்டு, அதன் மீது போடப்படும் முதல் தகவல் அறிக்கையை கேட்பது, நாங்கள் மேலிடத்துக்கு அனுப்பும் தபால்களின் நகலைக் கேட்கின்றனர்.அதை தர முடியாது என்பதால் தேவையற்ற புகார்களை கூறுகின்றனர்" எனத் தெரிவித்தார்.