ஈரோடு சூளை அருகே டாஸ்மாக் மதுக் கடைக்கு தீ வைத்த இரு மர்ம நபர்களை சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு போலீஸார் தேடி வருகின்றனர். 
க்ரைம்

ஈரோடு: டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த 2 பேர் கேமரா பதிவு மூலம் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

டாஸ்மாக் மதுபானக் கடைக்கு தீ வைத்த 2 மர்மநபர்களை ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஈரோடு சூளை அருகே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை ஒட்டி பார் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வழக்கம்போல் கடையை மூடி விட்டு சென்று விட்டனர். தொடர்ந்து நேற்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்துள்ளனர். அப்போது கடையின் முன்பகுதி, தடுப்புகளில் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது.

கடையை திறந்து பார்த்தபோது மது பாட்டில்கள் வைத்திருந்த சில பெட்டிகள் எரிந்து சேதம் அடைந்திருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் கடைக்கு வெளியே நின்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பதிவாகியிருந்தது.

இதனைகொண்டு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் ரூ.40,000 மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் சேதமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT