போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 5 பேர். 
க்ரைம்

குமுளி: போதை பொருள் வைத்திருந்த இளம் பெண் உட்பட ஐந்து பேர் கைது

செய்திப்பிரிவு

தமிழக எல்லையான குமுளியில் உள்ள சோதனைச்சாவடியில் கேரள கலால் உதவி ஆய்வாளர் பினீஷ் சுகுமாறன் தலைமையில் கிருஷ்ணகுமார், சேவியர், ராஜ்குமார், பிரமோத், தீபுகுமார், சசிகலா உள்ளிட்ட போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்கவில்லை. இதனால் போலீஸார் அந்த காரை விரட்டிச் சென்றனர். குமுளி அருகே 63-ம் மைல் பகுதியில் போலீஸார் காரை சுற்றி வளைத்து அதில் இருந்த இளம் பெண் உட்பட ஐந்து பேரை பிடித்தனர். சோதனையில் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட மெதம்பேட்டமைன் எனும் போதைப்பொருள் 3 கிராம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜின் (29), நிதீஷ் (28), கிரண் (29), பிரேம் (27), டைனா (22) என்பது தெரிய வந்தது. போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT