திருப்பத்தூர்: திருப்பத்துார் மாவட்டம் மேற்கத்தியனுார் அடுத்த புதுப் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம்(35) மற்றும் முருகன்(36). உறவினர்களான இருவருக்குமிடையே ஏற்கெனவே முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான முருகேசன், சிவன், கவிதா மற்றும் மகாராஜா, முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்களான உமா, ஜெகநாதன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து இருவரும் தனித்தனியாக திருப்பத்துார் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், இரு தரப்பையும் சேர்ந்த 9 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், சிவன், மகாராஜா, ஜெகநாதன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.