தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (39). இவர் போடியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரிடம் சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி இரண்டு தவணைகளில் ரூ.3 லட்சம் பெற்றுள்ளார்.
பின்பு சென்னை கார்கோ பிரிவு பணி நியமனத்துக்கான ஆணையை ரஞ்சித்திடம் வழங்கி உள்ளார். இது போலியான கடிதம் என்று தெரிந்ததால் ரஞ்சித் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து முத்துக்குமார் தலைமறைவானார். காவல் ஆய்வாளர் சரவணன் நேற்று முத்துக்குமாரை கைது செய்தார். விசாரணையில் போடியைச் சேர்ந்த இன்னொருவருடன் சேர்ந்து பலரிடமும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.