தேனி மாவட்டம் போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்வாணன் (46). இவர் வாய்க்கால்பட்டி அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாயை குத்தகை எடுத்து மீன் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் பரமத்தேவன் பட்டியைச் சேர்ந்த முத்தையா திருட்டுத்தனமாக மீன் பிடித்துக் கொண்டிருந்தார். காவலாளி ஈஸ்வரன் இது குறித்து கேட்கவே அவரை முத்தையா கடுமையாக தாக்கியுள்ளார். புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீஸார் முத்தையாவை கைது செய்தனர். சார்பு ஆய்வாளர் கணேசன் விசாரிக்கிறார்.