ஆம்பூர்: ஆம்பூர் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் கிராமிய காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்னூர் ராமர்கோயில் தெருவைச் சேர்ந்த குபேந்திரன் (58) என்பவர் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குபேந்திரனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.