கோப்புப் படம் 
க்ரைம்

சேவல் சண்டையில் ஈடுபட்ட 11 பேர் கைது: 7 உயிரிழந்த சேவல்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள நத்தமேட்டில் சேவல் சண்டை நடப்பதாக வாங்கல் போலீஸாருக்கு வந்த தகவலையடுத்து, போலீஸார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த புன்னம்சத்திரம் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(40), சின்ன ஆண்டாங்கோவிலைச் சேர்ந்த ரவி(60), ரெங்கநாதபுரம் சுதாகர்(29), பெரியஆண்டாங்கோவில் விக்னேஷ்(22), தென்னிலை நத்தமேட்டைச் சேர்ந்த பிரகாஷ்(30), முருகேசன்(48), காதப்பாறையைச் சேர்ந்த கணேசன்(47), தென்னிலை அம்மாபட்டியைச் சேர்ந்த முருகேசன்(57) ஆகிய 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும், அங்கு உயிரிழந்த நிலையில் இருந்த 5 சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

வாங்கல் காவிரி பாலம் அருகேயுள்ள ரயில்வே பாலம் அருகே சேவல் சண்டை நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, வாங்கல் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தி, சேவல் சண்டையில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார்(25), ராஜமாணிக்கம்(23), கார்த்திக்ராஜா(26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அங்கு உயிரிழந்த நிலையில் இருந்த 2 சேவல்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT