க்ரைம்

சங்கரன்கோவில் அருகே இளைஞர் கொலை

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் அருகே உள்ள வெள்ள கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியம் என்பவரது மகன் ஜான் பாண்டியன் (30). இதே பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் அந்தோணி (30). உறவினர்களான இருவரும், மது போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கத்தியால் குத்தப்பட்டதில் பலத்த காயம் அடைந்த ஜான் பாண்டியன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சின்ன கோவிலான்குளம் போலீஸார் அந்தோணியை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT