தூத்துக்குடி: நாசரேத் அருகே மறுகால்துறையைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி விநாயகி (35). இவரிடம் சாத்தான்குளம் அழகு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயபால் மகன் அழகுதுரை (31) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக அழகுதுரை கூறியுள்ளார். இதை நம்பிய விநாயகி தனக்கும், ஆழ்வார்திருநகரி அருகே செம்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி லெட்சுமணன் (27) என்பவருக்கும் வேலை வாங்கித் தருமாறு கூறி, ரூ.2,25,000 பணம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய அழகுதுரை வேலை வாங்கித் தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விநாயகி, சாத்தான்குளம் போலீஸில் புகார் செய்தார். தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, அழகுதுரையை கைது செய்தனர்.