விழுப்புரம் விராட்டிகுப்பம் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் கோட்டாட்சியர் அரிதாஸ் தலைமை யில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 
க்ரைம்

விழுப்புரம் ரேஷன் கடையில் கணக்கில் வராமல் பதுக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

விழுப்புரம் ரேஷன் கடையில் கணக்கில் வராமல் பதுக்கி வைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட விராட்டிகுப்பம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை எண் 14-ல்அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் ஆட்சியர் மோகனுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று காலை விழுப்புரம் கோட்டாட்சியர் அரிதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவா, மண்டல துணை வட்டாட்சியர் லட்சுமிபதி உள்ளிட்ட அலுவலர்கள் புகாருக்குள்ளான நியாயவிலைக் கடையில் விற்பனையாளர் ப்ரியா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் 4,263 கிலோ அரிசி, 67 கிலோ கோதுமை, 71 கிலோ சர்க்கரை, 65 சமையல் எண்ணெய் பாக்கெட், 30 துவரம் பருப்பு பாக்கெட் கணக்கில் வராமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ1,17,400 ஆகும். இதைதொடர்ந்து இக்கடை விற்பனையாளர் ப்ரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT