க்ரைம்

பண்ருட்டி அருகே சிறுமி கடத்தல்

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 14 வயது மகள் பண்ருட்டி அருகே உள்ள ராயர்பாளையத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில்கடந்த சில நாட்களாக தங்கி இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுமியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் உறவினர் புதுப்பேட்டை போலீஸில் புகார் செய்தார்.

புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT