கோில்பட்டி வள்ளுவர் நகர் 1-வது தெருவைச்சேர்ந்தவர் அந்தோணிமுத்து(77). நேற்று முன்தினம் இவரை சந்தித்த மர்மநபர், ரேஷன் கடையில் பொங்கல் பரிசு பணம் ரூ.5,000வாங்கிக் கொடுப்பதாக கூறியுள்ளார். இதனைநம்பிய அந்தோணிமுத்து, அவருடன் பேசியுள்ளார். அப்போது, புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும், கையில் மோதிரம் இருக்கக்கூடாது எனவும் கூறிய அந்த நபர், அந்தோணிமுத்து அணிந்திருந்த ரூ.31 ஆயிரம் மதிப்புள்ள 7 கிராம தங்க மோதிரத்தை வாங்கியுள்ளார். பின்னர், தபால் தலை வாங்கி வருமாறு அந்தோணிமுத்துவை அனுப்பி உள்ளார். அவர் தபால்தலை வாங்கிக்கொண்டு திரும்ப வந்தபோது, அந்த மர்மநபரை காணவில்லை. மர்மநபரை, கிழக்கு காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர்.