க்ரைம்

திருப்பத்தூர்: குழந்தையுடன் தாய் மாயம்

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்த அச்சமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(30). இவரது மனைவி அர்ச்சனா(26). இவர்களுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியில் இருந்த அர்ச்சனா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது ஒரு வயது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் செய்தனர். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான அர்ச் சனாவை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT