க்ரைம்

தவறாக நடக்க முயன்றதாக புகார்: சேலம் காவலர் பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

சேலம்: ரயில்வே பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்ற புகார் தொடர்பாக பனமரத்துப்பட்டி காவல் நிலைய காவலரை பணியிடை நீக்கம் செய்து சேலம் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

சேலம் அடுத்த மகுடஞ்சாவடி ஆ.புதூரைச் சேர்ந்தவர் செல்வன் (32). இவர் சேலம் பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த 2-ம் தேதி ரயில்வே பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்வனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்ட செல்வனை பணியிடை நீக்கம் செய்து சேலம் எஸ்பி  அபினவ் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT