க்ரைம்

விழுப்புரம்: இருவேறு திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டம் முத்தாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர், வெளியூர் சென்றுவிட்டு, கடந்தாண்டு ஜனவரி 21-ம் தேதி வீடு திரும்பினார். வீட்டிலிருந்த ரூ.1.40 லட்சம் மதிப்பிலான நகை திருடு போயிருந்தது. இத்திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய விழுப்புரம் கீழ்பெரும் பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் (22) மற்றும் நாபாளையத்தைச் சேர்ந்த பயாஸ் (20) ஆகிய இருவரையும் விழுப்புரம் தாலூகா போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கொளத்தூர் கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் கடந்த 5-ம் தேதி உண்டியல் உடைக்கப்பட்டு, பணம், கோயில் நகை திருடப்பட்டிருந்தது. இச் சம்பவத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உ.நெமிலியைச் சேர்ந்த ஏழுமலை (50) மற்றும் விழுப்புரம் தாயுமானவர் தெருவில் வசிக்கும் குமார் (38) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT