க்ரைம்

புதுச்சேரி வாணரப்பேட்டை இரட்டை கொலை வழக்கு: ரவுடி மணிகண்டனை காவலில் எடுத்து விசாரணை

செய்திப்பிரிவு

புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சேர்ந்த பாம் ரவி மற்றும் அவரதுநண்பர் அந்தோணி ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து முதலியார் பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் ரவுடி திப்ளானின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்தி ருப்பது தெரியவந்தது. அதன்பிறகு முக்கிய குற்றவாளிகளான வினோத், தீன் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது சில ரவுடிகளுக்கு இக் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கொலை தொடர்பாக பாஜக இளைஞரணி செயலாளர் விக்கி (எ) விக்னேஷை தனிப் படை கைது செய்து சிறையில் அடைத்தது. இவ்வழக்கில் தொடர் புடைய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கூலிப்படை தலைவர் தியாகுவை சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இக்கொலையில் சிறையில் இருக்கும் ரவுடி மர்டர்மணிகண்டன் சம்பந்தப்பட்டி ருப்பது தெரியவந்தது.

இதையடுத்து முதலியார் பேட்டை போலீஸார் புதுச்சேரி நீதிமன்றத்தில் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க முறை யிட்டனர்.

நீதிமன்றம் அனுமதியளித்ததன் பேரில் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மர்டர் மணிகண்டனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையிலிருந்து அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT