க்ரைம்

சிவகங்கை அருகே குடும்ப பிரச்சினையில் அண்ணன் மரணம்: தம்பி கைது

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சாம்பான் ஊருணியைச் சேர்ந்த சகோதரர்கள் ரவிக்குமார் (42), ராம்குமார் (41). இருவருக்கும் திரு மணம் ஆகவில்லை. பெற்றோருடன் வசித்த ரவிக்குமார் கூலி வேலையும், ராம்குமார் ஓட்டுநராகவும் வேலை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு ரவிக் குமார் தனது தாய், தந்தையிடம் பிரச்சினை செய்துள்ளார். இதை தட்டிக்கேட்ட தம்பி ராம்குமாருக்கும், ரவிக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராம்குமார் கீழே தள்ளிவிட்டதில், ரவிக்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர், வீட்டிலேயே அவர் தூங்கினார். நேற்று காலை ரவிக்குமாரை எழுப்பியபோது அவர் இறந்துகிடந்தார். திருப்பத்தூர் போலீ ஸார் ராம்குமாரைக் கைதுசெய்தனர்.

SCROLL FOR NEXT