தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூர் பகுதியில் தனியாருக்குச் சொந்த மான எம்சான்ட் குவாரி உள்ளது. இங்கு, விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டைவிளைபட்டியைச் சேர்ந்த மாடசாமி (40) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர், கிரஷர் இயந்திரத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது, இயந்திரத்தில் கை சிக்கியது. உடல் உள்ளே இழுக்கப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாடசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆழ்வார்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.