கற்பகம் 
க்ரைம்

விருதுநகரில் மனைவி குத்திக் கொலை: கணவர் காவல் நிலையத்தில் சரண்

செய்திப்பிரிவு

கடந்த சில நாட்களாக கற்பகத்தின் நடத்தையில் கண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை கற்பகத்தை கத்தியால் குத்திக் கொலை செய்த கண்ணன், பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கற்பகத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், கண்ணனை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT