க்ரைம்

திருப்பூர்: பள்ளி ஆசிரியர் போக்ஸோவில் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கரட்டுமடம் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், தமிழாசிரியராக பணியாற்றுபவர் தீபாலப்பட்டியை சேர்ந்த பி.அசோக்குமார் (37). இவர், ‘வாட்ஸ்அப்’ மூலமாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக, கடந்த 4-ம் தேதி திருப்பூர் மாவட்ட ‘சைல்டு லைன்’ அமைப்புக்கு புகார் வந்தது.

இதுதொடர்பாக, உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ‘சைல்டுலைன்’ அமைப்பினர் புகார் அளித்தனர். அதன்பேரில் மகளிர் போலீஸார் நடத்திய விசாரணையில், புகார் உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. இதையடுத்து, மாணவிகளுக்கு, ‘வாட்ஸ்அப்’பில் அசோக்குமார் அனுப்பிய குறுந்தகவலை ஆதாரமாகக்கொண்டு, அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து, போலீஸார் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT