க்ரைம்

தூத்துக்குடி: அம்மன்புரத்தில் நகைக்காக மூதாட்டி கொலை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: குரும்பூர் அருகே உள்ள அம்மன்புரம் திருவள்ளுவர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் காசி என்ற பெருமாள். இவரது மனைவிநாகூராள் (85). இவர்களது ஒரே மகள் இசக்கியம்மாளை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவருக்கு ராஜா (37), பழனிச்சாமி (31) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். காசி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், நாகூராள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இவருக்கு அவரது பேரன்கள் தினமும் சாப்பாடு கொண்டு வருவது வழக்கம். நேற்று காலை நாகூராளின் வீட்டின் கதவுஉள்ளே பூட்டாமல் இருந்தது. அவருக்கு காலைச் சாப்பாடு கொண்டுவந்த பழனிச்சாமி உள்ளே சென்றபோது, நாகூராள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போயிருந்தது. தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT