சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை அருகே ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரப்பதிவு செய்ததாக கணவர், மனைவி உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.
தேவகோட்டை அருகே கடகம்பட்டியைச் சேர்ந்தவர் நாகப்பன். அவர் இறந்தநிலையில், அவரது மனைவி புவனேஸ்வரி சென்னையில் வசித்து வருகிறார். நாகப்பனுக்கு சொந்தமான 2 காலி மனையிடங்கள் கடகம் பட்டியில் இருந்துள்ளது.
இந்நிலையில் நாகப்பனின் தம்பி குணசேகரன் தனது மனைவி மாரிமுத்துவை தனது அண்ணன் மனைவியாக காட்டி இரண்டு சொத்துகளையும் விற்றதோடு, போலியாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதற்கு காளிமுத்து, முத்தையா ஆகிய இருவரும் உடந்தையாக இருந்து ள்ளனர்.
இதுகுறித்து புவனேஸ்வரி புகாரின்பேரில் தேவகோட்டை தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து கணவர், மனைவி உட்பட நான்கு பேரை தேடி வருகின்றனர்.