திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சந்தை கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (72). இவரது மனைவி லட்சுமி(68). இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில், ஜோலார்பேட்டை காவல் துறையினர் அங்கு சென்று பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர்.
பின்னர், அவரது கடையில் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.