ஜான்சன் மரிய ஜோசப் 
க்ரைம்

செஞ்சி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பங்கு தந்தை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

செஞ்சி அருகே வேலந்தாங்கல் நார்சாகுளத்தை சேர்ந்தவர் ஜான்சன் மரிய ஜோசப் (34) இவர் விழுப்புரம் சவேரியார் சர்ச்சில் உதவி பங்கு தந்தையாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு திருப்பலி முடித்து, பைக்கில் தும்பூர் தேவாலயத்தில் இருந்து, விழுப்புரம் நோக்கிச் சென்றார். லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரேவந்த அடையாளம் தெரியாதவாகனம் மோதி உயிரிழந்தார்.விக்கிரவாண்டி போலீஸார்விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT