நாகை மாவட்டம் கீழ்வேளூர் அரசாணிக் குளம் தெற்கு மடவிளாகத்தைச் சேர்ந்தவர் தீபக்(21). நாகையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துகொண்டார். இதற்கு சிறுமியின் உறவினரான நாகை மேலக்கோட்டைவாசல் பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்பவர் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது, அந்தச் சிறுமி 9 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற தீபக், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில் தீபக், இந்திராணி ஆகியோர் மீது போக்ஸோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நாகை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.