க்ரைம்

கோவைப்புதூர் சிறப்பு காவல்படை முகாமில் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(57). இவர், கோவைப்புதூரில் உள்ள, தமிழ்நாடு சிறப்புக்காவல் படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சந்தோஷ், ஆவடியில் ஆயுதப்படைக் காவலராக பணியாற்றி வருகிறார்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைப்புதூரில் உள்ள முகாமுக்கு நேற்று காலை செல்வராஜ் வந்துள்ளார். முகாமில் உள்ள தனது அறைக்குச் சென்றவர் மீண்டும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த காவலர்கள் சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த குனியமுத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT